Theme Check

ஒமைக்ரான் : தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை அறிவிப்பு!?

ஒமைக்ரான் : தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை அறிவிப்பு!?

ஒமைக்ரான் : தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை அறிவிப்பு!?
X

ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் நிலையில் நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாளை முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சுழற்சிமுறை வகுப்புகளை சில மாதங்களுக்கு தொடர்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு சுழற்சி முறை வகுப்பிகள் நடைபெற்று வரும் நிலையில், கொரோனோ தொற்று எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

school 1

இந்த நிலையில் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு, மீண்டும் ஆன்-லைன் வழி வகுப்புகளை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் முதல்வர் தலைமையில் நாளை நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சுழற்சி முறையிலான வகுப்புகள் மீண்டும் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it