Theme Check

ஒமைக்ரான் பரவல்… மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஒமைக்ரான் பரவல்… மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஒமைக்ரான் பரவல்… மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!!
X

நாடு முழுவதும் புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் பரவி வரும் சூழலில் இந்தியாவில் மாஸ்க் பயன்பாடு குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. ஆனால் 2ஆவது அலை பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து முகக் கவசம் அணிவது, சமுக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பழக்கங்கள் குறையத் தொடங்கியுள்ளது.

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று இந்தியா உட்பட உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 25க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில் முகக்கவசம் அணிவது குறைந்துள்ளதற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

mask

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், முகக் கவசம் பயன்பாடு குறைவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் ஒமைக்ரான் பரவலின் நிலை கவலை அடைய செய்கிறது என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை, தற்போது நாம் ஆபத்தான மற்றும் ஏற்றுக்கொள்ளாத முறையில் செயல்பட்டுகொண்டிருக்கிறோம். இந்தியாவில் மாஸ்க் பயன்பாடு என்பது 2வது அலைக்கு முந்தைய காலக்கட்டதற்கு சமமான அளவு குறைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

crowd 1

முகக்கவசம், தடுப்பூசி இரண்டுமே முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், சர்வதேச சூழல்களை பார்த்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it