Theme Check

ஒமைக்ரான் பரவல் – பிரதமர் மோடி இன்று முக்கிய முடிவு!!

ஒமைக்ரான் பரவல் – பிரதமர் மோடி இன்று முக்கிய முடிவு!!

ஒமைக்ரான் பரவல் – பிரதமர் மோடி இன்று முக்கிய முடிவு!!
X

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

ஒமைக்ரானால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக டெல்லியில் 57 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒமைக்ரான் அறிகுறி இருக்கும் 69 பேரின் மாதிரி முடிவுகள் விரைவில் வெளிவரும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

omicron

இந்நிலையில் கொரோனா நிலவரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது. நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நடைபெறவுள்ள கூட்டத்தில் ஒமைக்ரான் பரவல் குறித்தும், புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 1,88,798 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படும் நிலையில், 2000க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

omicron

இதனால் கிறிஸ்துமஸ் க்கு பின்னர் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பெரும்பாலான நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. டெல்டா வைரசை விட அதிக வேகமாக பரவும் ஒமைக்ரான், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களையும் தாக்குவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it