Theme Check

ஒமைக்ரான் டெஸ்ட்… 5 மணி நேரத்தில் ரிசல்ட் பெறலாம்!!

ஒமைக்ரான் டெஸ்ட்… 5 மணி நேரத்தில் ரிசல்ட் பெறலாம்!!

ஒமைக்ரான் டெஸ்ட்… 5 மணி நேரத்தில் ரிசல்ட் பெறலாம்!!
X

சென்னை விமான நிலையத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்கும் பயணிகள் 5 மணி நேரத்தில் ரிசல்ட் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

'ஒமைக்ரான்' வைரஸ் பரவலை தடுக்க சீனா, தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சோதனை முடிவுகள் வரும் வரை, பயணிகளை விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்திள்ளது. இதனால் முடிவை தெரிந்து கொள்ள பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு, விமான பயணிகளுக்கான பரிசோதனை முடிவுகளை ஐந்து முதல் ஆறு மணி நேரத்துக்குள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

chennai_airport test

பயணிகளின் வசதிக்காக, காத்திருப்பு இருக்கைகளின் எண்ணிக்கை 450லிருந்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இணைப்பு விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு 20 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில், நாள் ஒன்றுக்கு சராசரி.யாக 750 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

newstm.in

Next Story
Share it