ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் – மீண்டும் முழு ஊரடங்கு!?
ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் – மீண்டும் முழு ஊரடங்கு!?

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவருவதால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து உலக நாடுகளை கதிகலங்க வைத்த கொரோனா தற்போது ஒமைக்ரான் என்று உருமாறி அச்சுறுத்தி வருகிறது.
கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டில், வைரஸ் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா வைரசை விட மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒமைக்ரான் தொற்று, பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி விட்டது.
ஐரோப்பா நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. தற்போது 246 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பும் அங்கு அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் கடுமையாக அமல்படுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
newstm.in

