ஒமைக்ரான்.. இந்தியாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?. மாலை பிரதமர் மோடி ஆலோசனை !!
ஒமைக்ரான்.. இந்தியாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?. மாலை பிரதமர் மோடி ஆலோசனை !!

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. எனினும் ஒருமாத காலத்தில் ஒமைக்ரான் வைரஸ் 106 நாடுகளில் பரவிவிட்டது.
இதேபோல், இந்தியாவிலும் கடந்த 2ஆம் தேதி நுழைந்த இந்த வைரஸ் தற்போது 269 பேருக்கு பாதித்துள்ளது. டெல்டா வைரசை விட குறைந்தது 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் ஒமைக்ரான் பரவிவிட்டதால் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேசிய அளவில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி டெல்லியில் இன்று மாலை சுகாதார நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் மற்றும் சுகாதார நிபுணர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் ஒமைக்ரானை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

