Theme Check

கோவை சென்ற ஆம்னி பேருந்தில் நள்ளிரவில் திடீர் தீ!!

கோவை சென்ற ஆம்னி பேருந்தில் நள்ளிரவில் திடீர் தீ!!

கோவை சென்ற ஆம்னி பேருந்தில் நள்ளிரவில் திடீர் தீ!!
X

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.

36 பயணிகளுடன் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து கோவையை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை காயாமொழி குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (34) என்பவர் ஓட்டிச் சென்றார்.

பேருந்து ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டோல்கேட் பகுதியை இரவு 10:20 மணி அளவில் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. அப்போது மின் கசிவு காரணமாக பேருந்தில் இருந்து தீப்பொறி வந்துள்ளது.

omni bus fire

இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தி பார்த்துள்ளார். அப்போது தீ மளமளவென பரவத் தொடங்கியதை அடுத்து, பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறக்கி விடப்பட்டனர்.

இதையடுத்து தீ பேருந்து முழுவதும் பரவி பற்றி எரிந்து எலும்புக்கூடுபோல காட்சியளித்தது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீக்கிரையானது.

omni bus fire

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்புத் துறை அதிகாரி குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it