Theme Check

பெற்றோர்களின் கவனக்குறைவால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி.!!

பெற்றோர்களின் கவனக்குறைவால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி.!!

பெற்றோர்களின் கவனக்குறைவால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி.!!
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி மாலை பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பவிஸ்கா, பலகாரம் சுட்டுவிட்டு தனியாக எடுத்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்துள்ளார்.

baby

வலி தாங்கா முடியாமல் பவிஸ்கா அலறிய சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்த போது, எண்ணெய் சட்டியில் விழுந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் பவிஸ்காவுக்கு தொடையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பவிஸ்கா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

baby

தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it