கோவில் பணியாளர்களுக்கு நூறு ஜோடி காலணி.. பிரதமர் மோடி வழங்கினார்..!
கோவில் பணியாளர்களுக்கு நூறு ஜோடி காலணி.. பிரதமர் மோடி வழங்கினார்..!

வாரணாசி காசி விசுவநாதர் கோவில் பணியாளர்களுக்கு சணலால் செய்யப்பட்ட நூறு ஜோடிக் காலணிகளை பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி வைத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகம் 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அப்போது, கோவில் பணியாளர்கள் காலணி அணியாமல் வெறுங்காலால் நடந்ததையும், கோவிலுக்குள் தோல், ரப்பர் ஆகியவற்றால் ஆன காலணிகள் அணியத் தடை உள்ளதையும் அறிந்தார்.
இதையடுத்து, பல்வேறு வண்ணங்களில் சணலால் உருவாக்கப்பட்ட நூறு ஜோடி காலணிகளை கோவில் பணியாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Next Story

