Theme Check

ஓராண்டில் ஒரு லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

ஓராண்டில் ஒரு லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

ஓராண்டில் ஒரு லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!
X

தமிழகத்தில் திமுக. ஆட்சிக்கு வந்த பின்னர், ஒரு லட்சமாவது மின் இணைப்பு வழங்குவதற்கான உத்தரவை உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விவசாயிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து விவசாயிகளுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: “அதிகபட்சமாக திருப்பூரில் 7,517 விவசாயிகளுக்கும், கிருஷ்ணகிரியில் 6,906 விவசாயிகளுக்கும், தர்மபுரியில் 6,816 விவசாயிகளுக்கும், திருவண்ணாமலையில் 6,527 விவசாயிகளுக்கும், திண்டுக்கல்லில் 5,916 விவசாயிகளுக்கும், கோவையில் 5,604 விவசாயிகளுக்கும், கள்ளக்குறிச்சியில் 5,364 விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை இலவசமாக கொடுத்ததோடு, விவசாயிகளுக்கு தேவையான மின் இணைப்பும் திமுக ஆட்சியில்தான் கொடுக்கப்பட்டது.

புதிதாக வழங்கப்பட்ட மின் இணைப்புகளால் தமிழகத்தில் விவசாய நிலப்பரப்பு 2.13 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளது. மின் இணைப்பு மூலம் விவசாயிகள் பெறும் பலனே அரசுக்கு கிடைக்கும் பாராட்டு. அரசின் திட்டங்களினால் எத்தனை லட்சம் பேர் பயனடைகின்றனர் என்பதை கண்காணிக்கிறேன்.

ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்க முடியுமா என சந்தேகம் இருந்தது. 2011 - 2021 வரை அதிமுக ஆட்சியில் 2.21 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது.

ஆனால், 2021 - 2022 திமுக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியுள்ளோம்” என்று ஸ்டாலின் கூறினார்.

Next Story
Share it