இனி கொரோனாவுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி.. இந்தியாவின அனுமதி கிடைக்குமா?
இனி கொரோனாவுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி.. இந்தியாவின அனுமதி கிடைக்குமா?

சிங்கில் டோஸ் கொரோனா தடுப்பூக்கு அனுமதி கோரி இந்தியாவிடம் விண்ணப்பத்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் பாடாய் படுத்தி வருகிறது. கொரோனா 3ஆவது அலை, உருமாற்றம் அடைந்த கொரோனா என நாள்தோறும் அதன் பாதிப்புகளை நாம் உணர்ந்து வருகிறோம். அந்தவகையில் தற்போது டெல்டா வகை கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக உள்ளது.

பல நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், இந்தியாவிலோ பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி தடுப்பூசி தயாரிப்பதை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த ஒரு தவணை தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது
இதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்திய நிறுவனத்தின் சார்பில் கூறுகையில், கொரோனாவுக்கு ஒரு தவணை தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் பிரைவேட் லிமிடட் இந்திய அரசிடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி விண்ணப்பித்துள்ளது.
இந்திய மக்களுக்கும் உலகத்திற்கும் ஒரு தவணை தடுப்பூசியை வழங்குவதில் முக்கிய மைல்கல்லாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது. பயோலாஜிக்கல் இ லிமிடட் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறோம் என கூறப்பட்டுள்ளது.
newstm.in

