Theme Check

ஒரு பக்கம் இரவுநேர ஊரடங்கு.. பகலில் கட்சிக்கூட்டம்.. பாஜகவை வெளுத்து வாங்கிய சொந்த கட்சி எம்.பி !!

ஒரு பக்கம் இரவுநேர ஊரடங்கு.. பகலில் கட்சிக்கூட்டம்.. பாஜகவை வெளுத்து வாங்கிய சொந்த கட்சி எம்.பி !!

ஒரு பக்கம் இரவுநேர ஊரடங்கு.. பகலில் கட்சிக்கூட்டம்.. பாஜகவை வெளுத்து வாங்கிய சொந்த கட்சி எம்.பி !!
X

நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகிறது. பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கு விதித்துள்ளது. அந்த வகையில், உத்தரபிரதேச மாநில அரசின் நடவடிக்கை இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜக கட்சி சார்பிலும், பிற அரசியல் கட்சிகள் சார்பிலும் ஏராளமான பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

varun ghanthi

தற்கிடையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் கடந்த 25-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோதும் பகல் நேரத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால், தேர்தல் பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை பாஜக எம்.பி. வருண் காந்தி விமர்சித்துள்ளார்.

varun ghanthi

அவர் கூறியதாவது, உத்தரப்பிரதேசத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்க இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பகலில் லட்சக்கணக்கான மக்களை கூட்டி பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இந்த நடவடிக்கைகள் சாதாரண மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்பை கணக்கில் கொண்டு ஒமைக்ரானை தடுப்பது முக்கியமா அல்லது தேர்தல் முக்கியமா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும், என வருண் காந்தி விமர்சித்துள்ளார்.

இதையடுத்து வருண் காந்தி பாஜகவில் இருந்துக்கொண்டே தலைமையை விமர்சிப்பதாக அக்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it