Theme Check

18 + பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

18 + பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

18 + பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
X

“பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்” என, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது: “பஞ்சாப் மாநிலம் வளர்ச்சி மற்றும் வளம் பெறுவதற்கு 10 அம்ச 'பஞ்சாப் மாடல்' திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்.
Back at your service' — Delhi CM Arvind Kejriwal after testing negative for  Covid
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், பஞ்சாபில் வளர்ச்சி ஏற்படுத்துவதுடன், வேலை தேடி கனடாவிற்கு சென்றவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் சொந்த ஊர் திரும்புவார்கள். போதை கூட்டணியை உடைப்பதுடன், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

15 ஆயிரம் மொகல்லா கிளினிக் அமைப்பதுடன் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிப்போம். வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவோம்.

பல்பீர் சிங் ரஜேவால் தலைமையிலான சன்யுக்தா சமாஜ் மோர்ச்சா தேர்தலில் தனித்து போட்டியிட்டால், ஆம் ஆத்மியின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதை நான் ஒப்பு கொள்கிறேன்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Next Story
Share it