Theme Check

ஒரு வாரம் முழு ஊரடங்கு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் முதல்வர் !!

ஒரு வாரம் முழு ஊரடங்கு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் முதல்வர் !!

ஒரு வாரம் முழு ஊரடங்கு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் முதல்வர் !!
X

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று பெருத்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை புதிய உச்சத்தை தினந்தோறும் தொற்று ஏற்படுத்தி வருகிறது.

இதனால் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்தது. குறிப்பாக தொற்று சங்கிலியை உடைத்து பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி ஊரடங்கை அமல்படுத்த ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டது. இதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி டெல்லியில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஊரடங்கு அமலில் இருந்தது.

எனினும், டெல்லியில் நேற்று மட்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,462 ஆக அதிகரித்தது. அதேபோல் கொரோனாவால் 167 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும் அந்தந்த நீதிமன்றங்களின் அவசர வழக்குகளை மட்டுமே வீடியோ கான்பரன்சிங் முறை மூலம் எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக டெல்லியில் இன்று இரவு முதல் அடுத்த திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக டெல்லி துணை நிலை ஆளுநருடன் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு நடத்தினார். அப்போது டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்து வருகிறது. மருத்துவமனையில் கூடுதல் சுமை அதிகரித்து வருவதாக எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க ஒருவாரம் முழு ஊரடங்கை அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார் இன்றிரவு 10 மணிமுதல் 26 ஆம் தேதி காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மக்கள் பின்பற்ற வேண்டும் அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என கூறியுள்ளார். மேலும் இதன்மூலம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என நம்புவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it