வெந்நீர் பாத்திரம் விழுந்து ஒரு வயது குழந்தை பலி..!
வெந்நீர் பாத்திரம் விழுந்து ஒரு வயது குழந்தை பலி..!

மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தினருடன் கொடிமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி இரவில் அவருடைய 1 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெந்நீர் இருந்த பாத்திரத்தை குழந்தை தள்ளி விடவே, அந்த பாத்திரத்தில் இருந்த சூடான வெந்நீர் குழந்தையின் மீது கொட்டி தீக்காயங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக குழந்தை சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த குழந்தை சிகிச்சைப் பலனின்றி தீக்காயங்களினால் நேற்று உயிரிழந்தது.
இதுகுறித்து நாகமலை - புதுக்கோட்டை போலீசார் கிரிமினல் நடைமுறைச் சட்டம் 174 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

