சர்வர் முடங்கியதால் கொரோனா தடுப்பூசிக்கான ஆன்லைன் முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கும் !!
சர்வர் முடங்கியதால் கொரோனா தடுப்பூசிக்கான ஆன்லைன் முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கும் !!

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2 ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலில் மருத்துவ பணியாளர்களுக்கும் அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.அதன் பிறகு நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை பெறுவதற்காக ‘கோவின்’ இணையதளம் அல்லது ‘ஆரோகிய சேது’ செயலி மூலமாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
இந்நிலையில் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் எழுந்தது. நேற்று நள்ளிரவு முதல் பலர் முன்பதிவு செய்ய முயற்சி செய்தால், இணையதள சர்வரில் முடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மாலை 4 மணி முதல் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்! எப்படி முன்பதிவு செய்வது? என்னென்ன ஆவணங்கள் தேவை!
newstm.in

