10 நாள் தான் இருக்கு.. அதன்பிறகு 18 வயசு நிரம்பியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!
10 நாள் தான் இருக்கு.. அதன்பிறகு 18 வயசு நிரம்பியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. அதே நேரத்தில் நோய் பரவல் மிக வேகமாக இருப்பதால் மாநிலத்திற்கு ஏற்ப பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு அமலுக்கு வர இருக்கின்றன.
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக புதிய உச்சம் தொட்டு வருகிறது.வேகமாக பரவும் கொரோனாவை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி தான் என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழலில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் நிலையில் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.உற்பத்தியாகும் தடுப்பூசியில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் மீதமுள்ள 50 சதவித தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுசந்தை விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி .
NEWSTM.IN

