Theme Check

வெறும் 2% தான்.. 2 ஆவது முறையாக அதிபராகிறார் இமானுவேல் மேக்ரான் !!

வெறும் 2% தான்.. 2 ஆவது முறையாக அதிபராகிறார் இமானுவேல் மேக்ரான் !!

வெறும் 2% தான்.. 2 ஆவது முறையாக அதிபராகிறார் இமானுவேல் மேக்ரான் !!
X

பிரான்ஸ் அதிபராக பதவி இமானுவேல் மேக்ரான் இருந்து வருகிறார். இவருடைய பதவி காலம் முடிவடைய உள்ளதால் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த நதாலி ஆர்தாட் உள்பட 12 பேர் களமிறங்கினர்.

france election

பிரான்சில் முதல் சுற்று அதிபர் தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடந்தது. இதில், இமானுவேல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இரண்டாம் கட்டம் நேற்று நடைபெற்றது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் மேக்ரான் 58 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றிபெற்றார்.

france election

இதன்மூலம் அந்நாட்டின் 12ஆவது அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 42 சதவீதம் வாக்குகள் பெற்றார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இமானுவல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இமானுவேல் மேக்ரான் கடந்த 2017 முதல் பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it