Theme Check

பேருந்துகள், திரையரங்குகளில் 50% மட்டும் அனுமதி!!

பேருந்துகள், திரையரங்குகளில் 50% மட்டும் அனுமதி!!

பேருந்துகள், திரையரங்குகளில் 50% மட்டும் அனுமதி!!
X

கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரியில் திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50% பேரை மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

ஊடரங்கு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக சித்தா/இயற்கை மருத்துவ முறையை கையாள தனி மையம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு யோகா பயிற்சி, மூலிகை சாறு, ஊட்டச்சத்து உணவு ஆகியவை வழங்கலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார். நடமாடும் பல்ஸ்ஆக்சிமீட்டர் வாகனம், நடமாடும் பிராணவாயு வாகனம் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

TAMILISAI

மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்,மருத்துவமனைகளில் படுக்கைகள், பிராண வாயு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள், ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

மக்கள் கூடும் இடங்களில் கோவிட் பரிசோதனைகளில் அதிகரிக்க வேண்டும், திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50% மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

puducherry

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை உடனடியாக இயக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it