Theme Check

ஒரே டிஜிட்டல் அடையாள அட்டை – மத்திய அரசு புது முயற்சி!!

ஒரே டிஜிட்டல் அடையாள அட்டை – மத்திய அரசு புது முயற்சி!!

ஒரே டிஜிட்டல் அடையாள அட்டை – மத்திய அரசு புது முயற்சி!!
X

ஆதார் அடையாள அட்டையை போல டிஜிட்டல் வழியாக ஒரு அட்டையை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பப்பிரிவு, நமது அடையாள அட்டைகள் அனைத்தையும் டிஜிட்டல் வழியாக ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும் (Federated Digital Identities) முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் ஓட்டுநர் உரிமம், பேன்கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல அடையாள அட்டைகளை இணைய வழியில் நம்மால் இணைக்க முடியும் என்கின்றனர். இவை அனைத்தையும் இணைத்து, ஒரு டிஜிட்டல் கார்டு தர அரசு முனைவதாக தெரிகிறது.

இந்த புதிய கார்டு, ஆதார் கார்டு எண்ணைப் போல இருக்குமென கூறப்படுகிறது. இதன்மூலம் மக்களின் பணிகள் யாவும் எளிமையாகும் என கூறப்படுகிறது. அதாவது, இது வந்தபின்னர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கார்டு எண்ணை தேடி அலைய வேண்டாம்.

North_Block_Delhi

இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தரும் எல்லா அடையாள அட்டைகளையும் இணைக்க முடியுமென சொல்லப்படுகிறது. இதில் ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்ய கே.ஒய்.சி. எனப்படும் அடையாளப் பரிசோதனை இணைய வழியாகவோ நேரடியாகவோ மேற்கொள்ளப்படுமென சொல்லப்படுகிரது.

இப்படி அனைத்து தகவல்களையும் கொண்டு வருகையில், தகவல்கள் கசியும் அபாயமிருப்பதாக சில வல்லுநர்கள் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருப்பினும் இதுவரை இத்திட்டம் குறித்து முழுமையான அறிவிப்பு அரசு தரப்பிலிருந்து வரவில்லை.

newstm.in

Next Story
Share it