Theme Check

1 மணி வரை மட்டுமே.. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் எச்சரிக்கை !!

1 மணி வரை மட்டுமே.. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் எச்சரிக்கை !!

1 மணி வரை மட்டுமே.. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் எச்சரிக்கை !!
X

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி, மளிகை, பூ, பழம் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது. சுமார் 4 ஆயிரம் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இங்கு, கொரோனா வைரஸ் முதல் அலையின் போது வியாபாரிகள், கடை ஊழியர்கள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கோயம்பேடு சந்தை முழுவதுமாக மூடப்பட்டு காய்கறி விற்பனை திருமழிசைக்கும், பழ கடைகள் மாதவரம் பஸ் நிலையத்திற்கும், பூ கடைகள் வானகரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்து மீண்டும் மார்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நள்ளிரவு தொடங்கி பகல் 1 மணி வரை மட்டுமே காய்கறி விற்பனை கடைகள் செயல்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

cmbt

இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு முதன்மை அதிகாரி சாந்தி கூறியதாவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்கெட் வளாகத்திற்குள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து நுழைவு வாயில்களிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் தங்களது கடைகள் முன்பு சாணிடைசர் வைத்து இருக்க வேண்டும்.

உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத வியாபாரிகள், ஊழியர்கள், பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். எங்களது ஊழியர்கள் வளாகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒத்துழைப்பு தராத வியாபாரிகளின் கடைகளை பூட்டி சீல் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என அவர் கூறினார்.

newstm.in

Next Story
Share it