Theme Check

தடுப்பூசி போட்டவர்கள் தான் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி.. முதலமைச்சர் அறிவிப்பு !!

தடுப்பூசி போட்டவர்கள் தான் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி.. முதலமைச்சர் அறிவிப்பு !!

தடுப்பூசி போட்டவர்கள் தான் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி.. முதலமைச்சர் அறிவிப்பு !!
X

மும்பையில் முதல் கட்டமாக மின்சார ரயில்களில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவியதும் அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா இருந்தது. அடுத்தடுத்து பலரும் மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். கொரோனா 2ஆவது அலை உச்சம் தொட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மின்சார ரயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.

mumbai train

எனினும் அத்தியாவசிய, சுகாதார மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் அலுவலகம், வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். எனவே மின்சார ரயிலில் அனைத்து தரப்பினரும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மிலிந்த் தியோரா மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மற்ற கட்சிகள், பல்வேறு தரப்பினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.

mumbai train

இந்தநிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று இரவு சமூகவலைதளம் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அவர் அவர் மேலும் கூறியதாவது, இதுவரை மும்பையில் 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். எனவே முதல் கட்டமாக மின்சார ரயில்களில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிந்தவர்கள் வருகிற 15ஆம் தேதி முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம்.

தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பெற செல்போன் செயலி உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட், மாத பாசை பெறலாம். ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் நேரடியாகவும் டிக்கெட், பாஸ் பெறலாம். பொதுமக்கள் வார்டு ஆபிஸ், புறநகர் ரயில்நிலையங்களிலும் டிக்கெட் பெறலாம். பாஸ்களின் உண்மை தன்மையை கண்டறிய க்யுஆர் கோடு வழங்கப்படும்.

newstm.in

Tags:
Next Story
Share it