அச்சச்சோ... தாலி கட்டிய பின், மயங்கி விழுந்து மணப்பெண் மரணம்! சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்
அச்சச்சோ... தாலி கட்டிய பின், மயங்கி விழுந்து மணப்பெண் மரணம்! சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்

ஒடிசா மாநிலம், சோனேபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் குப்தேஸ்வரி ரோஸி. அவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அதன்பின்னர் தனது கணவருடன் அவரது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது குடும்பத்தை விட்டு பிரிய முடியாமல் அழுதிருக்கிறார். குடும்பத்தினர் எவ்வளவு சமாதானம் கூறியும் அவரால் அழுகையை நிறுத்தமுடியவில்லை. ஒரு கட்டத்தில் விக்கி விக்கி அழுத அவர் திடீரென்று மயக்கமடைந்து விட்டார்.
மணமகள் ரோஸி, மயக்கமடைந்தவுடன் கூடியிருந்த உற்றார் உறவினர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார்கள். ஆனால், ரோஸிக்கு மீண்டும் சுயநினைவு வரவில்லை.

உடனே ரோஸியை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணமகள் ரோஸி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் திருமணம் இல்லம் சில மணி நேரங்களில் துக்க வீடாக மாறியது. மணமகள் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
உணர்ச்சி ரீதியாக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும், ரோஸியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே முழு காரணம் தெரிய வரும் எனவும் போலீசார் கூறுகின்றனர்.

இதனிடையே விசாரணையில் மேலும் சில தகவல்கள் வெளிவந்தன. அதாவது, மணமகள் ரோஸியின் தந்தை சில மாதங்களுக்கு முன்புதான் காலமானார். அதிலிருந்தே மணமகள் ரோஸி துக்கத்தில் இருந்ததாக திருமணத்திற்கு வந்த ஒரு விருந்தினர் கூறினார்.
அது ஒருபுறமிருக்க சில குடும்ப சிக்கலும் இருந்ததாகவும் அதனால் கூட ரோஸி சோகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே வேறு ஏதும் காரணம் உள்ளதா என மணமகன் வீட்டாரிடமும் அப்பெண்ணின் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in

