Theme Check

ஓபன் டாக்! உதயநிதி துணை முதல்வராக ஆசைப்படும் அமைச்சர்!!

ஓபன் டாக்! உதயநிதி துணை முதல்வராக ஆசைப்படும் அமைச்சர்!!

ஓபன் டாக்! உதயநிதி துணை முதல்வராக ஆசைப்படும் அமைச்சர்!!
X

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண்டும் என்று தாம் ஆவலுடன் காத்திருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேற்கு கூவம் சாலை வழியாக புதிய பேருந்து வழி தடத் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், சென்னையில் எந்த பகுதிகளில் எல்லாம் பள்ளி மாணவர்கள் செல்ல போதுமான பேருந்துகள் இல்லையோ அந்த பகுதிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து கண்டறிந்து போதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

siva sankar

அதேபோல், இரவு பேருந்துகள் போதுமான அளவு இயக்கப்படாத இடங்களையும் கண்டறிந்து பழையபடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக வேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கைக்கு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி செய்யும் பணியை மக்கள் பார்ப்பது போல், அவர் அமைச்சரானால் மிகச் சிறப்பாக செயல்படுவார்.

udhayanidhi

எனவே அவர் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை தாமும் முன்வைப்பதாக கூறினார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it