Theme Check

30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நாட்டில் ஒரு தியேட்டர் திறப்பு.. ஆனந்த கண்ணீரில் மக்கள் !

30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நாட்டில் ஒரு தியேட்டர் திறப்பு.. ஆனந்த கண்ணீரில் மக்கள் !

30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நாட்டில் ஒரு தியேட்டர் திறப்பு.. ஆனந்த கண்ணீரில் மக்கள் !
X

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவின் நிலை அனைத்து மக்களும் அறிந்த ஒன்று. உள்நாட்டுப்போரிலும், வறுமையின் பிடியிலும் சிக்கித்தவிக்கிறது. அதுபோக அரசியல் தலைவர்களின் பங்கும் இதற்கு காரணம். இதனால் அந்நாட்டு மக்கள் திரைப்படம், கேளிக்கை என அனைத்தையும் மறந்து விட்டனர் என்றே கூறலாம்.

அதாவது, சோமாலியாவில் 1991ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் தொடங்கியதும் தியேட்டர்கள் மூடப்பட்டன. ஏன் படப்பிடிப்பு அனைத்தும் அடியோடு நிறுத்தப்பட்டது. காரணம், தியேட்டர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்கள் அதிகரித்து அதற்கான களங்களாக மாறிவிட்டன. இதுவே சினிமா அழிவின் நிலைக்கு சென்றதற்கு காரணம்.

somaliya

இந்தநிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மொகாதிசுவில் நேஷனல் தியேட்டரில் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளன. முதலாவதாக 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன.

இதுகுறித்து தியேட்டர் இயக்குனர் அப்திகாதிர் அப்தி யூசுப் கருத்து தெரிவிக்கையில், இந்த இரவு சோமாலி மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரவு என்று குறிப்பிட்டார். மேலும், பல ஆண்டு சவால்களுக்கு பிறகு இது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. சோமாலிய பாடலாசிரியர்கள், திரைப்பட இயக்குனர்கள், நடிகர் நடிகையர் தங்கள் திறமையை வெளிப்படையாக காட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் தளமாக இது அமையும் என்று தெரிவித்தார்.

somaliya

இந்த தியேட்டரில் 2 குறும்படங்களை இந்திய மதிப்பில் சுமார் ரூ.750 அதாவது 10 டாலர் கொடுத்து மக்கள் பார்த்து ரசித்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it