கோவையில் 55 அடி மேம்பாலம் திறப்பு
கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அடுக்கு மேம்பாலத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார். கோவையில் அமைச்சர் வேலுமணி கொடி அசைத்து வாகன போக்குவரத்தை துவக்கி வைத்தார்.

கோவை காந்திபுரம் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, காந்திபுரம் 100 அடி சாலை அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அடுக்கு மேம்பாலம் நேற்று திறக்கப்பட்டது.கோவையில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.'மெட்ரோ ரயில்' திட்டத்தை செயல்படுத்தவும் ஆலோசனை நடந்து வருகிறது.
55 அடி உயரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டதால் வாகனங்கள் பாலத்தின் மேல் பயணிப்பதில் சிரமம் ஏற்படும் என வாகன ஓட்டிகள் கருதினா். ஆனால் வாகனங்கள் பயணிக்கும் விதமாகவே பாலம் கட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
newstm.in