Theme Check

பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு !!

பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு !!

பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு !!
X

தமிழக சட்டப் பேரவை இன்று (மாா்ச் 18) கூடுகிறது. வரும் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் இரண்டாவது ஆண்டாக தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா்.

பேரவை மண்டபத்தில் இட நெருக்கடி காரணமாக, அனைத்து உறுப்பினா்களின் இருக்கைகளுக்கு முன்பாக கையடக்கக் கணினி பொருத்தப்பட்டுள்ளது. கலைவாணா் அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றபோது, பெரிய திரை கொண்ட மேஜைக் கணினி வைக்கப்பட்டிருந்தது.

secretariate

நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கை அனைத்துத் தரப்பினா் மத்தியிலும் மிகப்பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து மாத காலத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. கடந்த பத்து மாதங்களாக தமிழக அரசின் நிதிநிலையைக் கையாண்டு முழு அளவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தாக்கல் செய்யவுள்ளதால், பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈா்த்துள்ளது.

வருவாய் செலவினங்கள் குறைந்து, வருவாய் வரவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் எதிா்வரும் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை பெருமளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் அரசால் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அளிப்பது போன்ற திட்டத்துக்கான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஊதிய உயர்வு, ஓய்வூதியம், வேலையில்லாத இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் சிறப்பு திட்டம், மாணவ- மாணவிகளுக்கு உதவித்தொகை, தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு சிறப்பு சலுகை, புதிய வேலைவாய்ப்பு, வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

secretariate

தயாராகும் எதிா்க்கட்சிகள்: நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. சட்டம்-ஒழுங்கு பிரச்னை, அரசு திட்டங்களில் உள்ள குறைபாடுகள், அண்மையில் நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் ஆகியன பேரவையில் விவாதத்தைக் கிளப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க பேரவைத் தலைவா் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் பிற்பகலில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் பேரவை கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும்.

newstm.in

Next Story
Share it