Theme Check

அமைதி திரும்ப வாய்ப்பு.. சம்மதம் தெரிவித்த உக்ரைன் அதிபர் !

அமைதி திரும்ப வாய்ப்பு.. சம்மதம் தெரிவித்த உக்ரைன் அதிபர் !

அமைதி திரும்ப வாய்ப்பு.. சம்மதம் தெரிவித்த உக்ரைன் அதிபர் !
X

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில், முன்பைவிட இப்போது தாக்குதல் உக்கிரம் அடைந்துள்ளது. நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும் என சர்வதேச அளவில் கருத்துகள் மேலோங்கியுள்ளன.

russia attack

இந்த நிலையில் உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது. அதன்பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதற்காக, பெலாரஸ் நாட்டில் உள்ள கோமலுக்கு ரஷ்ய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த அழைப்பையும் உக்ரைன் ஏற்க மறுத்தது. பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை உக்ரைன் வீணடிப்பதாக ரஷ்ய குற்றம்சாட்டியது.

russia attack

இந்நிலையில், ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பெலாரசில் விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ரஷ்யா- உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்பட்டு, அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it