ஓபிஎஸ் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.. ஜெயக்குமார் தாக்கு !!
ஓபிஎஸ் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.. ஜெயக்குமார் தாக்கு !!

கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் ஓபிஎஸ் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,பெரியார் பல்கலைக்கழகத்தில் கேட்கப்பட்ட சாதிய கேள்விக்கு திராவிட மாடல் அரசில் இது போன்றுதான் இருக்கும். எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் இதை கவனித்திருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்று தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் புத்தியுள்ள அரசு இதை செய்யும். இந்த அரசு புத்தி இல்லாத அரசு, என்று விமர்சித்தார்.
ஒபிஎஸ் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் அவர் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டு தேதி குறிப்பிட்டிருக்கிறது. அதைக்கூட கவனிக்காத அளவில் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் இடைக்கால பொதுச் செயலாளருக்கு தான் உள்ளது. ஆதலால் அவரின் நீக்கம் செல்லாது.

ஓபிஎஸ் தரப்பினர் தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக கூறுவது கேலிக்கூத்தாகவே இருக்கிறது, அவர் எங்களை கட்சியிலிருந்து நீக்கியது என்பது ஒரு காமெடியாகவே பார்க்கப்படுகிறது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் எனக் கூறுவது போல் தன்னை நீக்கிய போது கூட கொந்தளிக்காத ஓபிஎஸ் தன் மகனை நீக்கியதற்கு கொந்தளித்தார். நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற முயற்சிக்காமல் தன் மகனை மட்டுமே வெற்றி பெற செய்தார் ஓபிஎஸ், என்று கூறினார்.
கட்சித் தொண்டர்கள் மனவருத்தம் அடையும் விதமாக ஓபிஎஸ் செயல்பட்டுள்ளார். உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தொண்டர்களை மன வருத்தத்தில் ஆழ்த்தியவர். அவர் திரும்பி வந்தால் சேர்த்து கொள்வது குறித்து இப்பொழுது கூற முடியாது, என தெரிவித்தார்.
newstm.in

