Theme Check

தூங்குபவரை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது... போட்டுத் தாக்கும் ஜெயக்குமார்..!

தூங்குபவரை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது... போட்டுத் தாக்கும் ஜெயக்குமார்..!

தூங்குபவரை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது... போட்டுத் தாக்கும் ஜெயக்குமார்..!
X

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று (27-ம் தேதி) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது;

“ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகி விட்ட சூழலில், கட்சியை வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி இக்கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் பங்கேற்றனர்.

5 பேர் சில காரணங்களால் வர முடியவில்லை என கடிதம் கொடுத்துள்ளனர். 4 பேர் பங்கேற்கவில்லை. வரும் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கான அழைப்பிதழை தபாலில் அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை வெளியில் சொல்ல முடியாது. ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக நீடிப்பாரா என்பது ஜூலை 11-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தெரியவரும்.

பன்னீர்செல்வத்திற்கு கட்சியின் அடிப்படை விதிகளே தெரியவில்லை. தூங்குபவரை எழுப்பி விடலாம்; தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக இருப்பவர் ஓபிஎஸ்.

துரோகம் என்பது அவர்களின் உடன் பிறந்த ஒன்று. அவரது மகன் ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக கூறுகிறார். இதனை எந்தவொரு அதிமுக தொண்டனும் விரும்ப மாட்டான்” என்று அவர் கூறினார்.

Next Story
Share it