Theme Check

பொதுச் செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிடலாம் : ஈபிஎஸ் தரப்பு!!

பொதுச் செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிடலாம் : ஈபிஎஸ் தரப்பு!!

பொதுச் செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிடலாம் : ஈபிஎஸ் தரப்பு!!
X

பொதுச்செயலாளருக்கான தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஜூலை 11-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என ஜூன் 23 ஆம் தேதியே அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் ஒபிஎஸ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் இருந்த கூடுதல் மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என இபிஎஸ் தரப்பு வாதங்களை முன் வைத்தது.

eps

ஓபிஎஸ் தரப்பில், பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டது சட்ட விதிகளுக்குட்பட்டதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும். பொதுக்குழு நோட்டீஸ் செல்லுமா என்பதை விவாதிக்க வேண்டும். பொதுக்குழு உட்பட எந்த கூட்டம் நடந்துவதற்கு ஒருங்கினைப்பாளர்களின் ஒப்புதல் தேவை. ஒருங்கினைப்பாளரின் அதிகாரத்தை அவைத்தலைவர் உட்பட யாரும் பறிக்க முடியாது என கூறப்பட்டது.

ஜூன்23ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும் போது ஜூலை 11 பொதுக்குழு அறிவிப்பை தமிழ்மகன் உசேன் எப்படி அறிவிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி தரப்பு, பதில் மனுவாக தாக்கல் செய்கிறோம். பொதுக்கூட்டம் நடைபெறட்டும். மற்ற விவகாரங்கள் குறித்து பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு பார்த்து கொள்ளலாம். பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும்.

ops

ஓபிஎஸ் மனு விசாரணைக்கு உகந்ததா என ஆய்வு செய்ய வேண்டும். கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். இன்றைய நிலையில் கட்சியில் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை. கட்சி விதிகளை திருத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு தான் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்யவும் இபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it