Theme Check

6 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

6 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

6 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!
X

மகாராஷ்டிரா மாநிலத்தின் 6 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதலே பெய்து வரும் கனமழையால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் பொதுமக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், என்.டி.ஆர்.எஃப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டுள்ளார். மும்பையில், புறநகர் ரயில் சேவையும், சாலைப் போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.

Next Story
Share it