கனமழை தொடரும்- 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !!
கனமழை தொடரும்- 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !!

கேரளாவில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மலையோர மாவட்டங்களான இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கேரள வானிலைத்துறை அடுத்த சில நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், இந்திய வானிலை ஆய்வு மையமும் கேரளாவில் கனமழை கொட்டும் என கூறியுள்ளது. குறிப்பாக 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

நாளை மறுநாள் முதல் (அக்.11) முதல் 3 நாட்களுக்கு கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி உள்பட 7 மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை அறிக்கையில் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் ‘கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அங்கு மீட்புகுழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
newstm.in

