ஆஸ்கர் விருது 2020! ரெட் கார்ப்பெட்டைப் புறக்கணித்த விருது வெற்றியாளர்கள்!
உலக சினிமா கலைஞர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைப்பெற்ற விழாவில் சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒளிப்பதிவு,

உலக சினிமா கலைஞர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைப்பெற்ற விழாவில் சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என மூன்று ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது 1917 திரைப்படம்.
Aaaaaand final look is ruined lol. Pretty heavy rain coming down and wind is blowing it on the carpet. Yikes! *rain rain go away* @ABC7News @ABC7Alex @ABC7Kidd #Oscars pic.twitter.com/E0e2lEuOdV
— Caroline Patrickis (@Cpatrickis) February 9, 2020
ஆஸ்கர் விருதின் முக்கிய நிகழ்ச்சியாக பிரபலங்களுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பு அளிப்பது வழக்கம். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மழை வெளுத்து வாங்கி வருவதால், விழா நடைபெறும் டால்பி திரையரங்கின் நுழைவு வாயில் ரெட் கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்டதுமே, மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சிவப்பு நிற கார்ப்பெட் சேரும் சகதியுமானது. விழா நடைபெறும் டால்பி திரையரங்கின் மேற்கூரை வழியாகவும் விழா மேடைக்கு அருகில் மழை நீர் கொட்டத் துவங்கியது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விழாவில் இப்படி மழை சகட்டு மேனிக்கு நாசம் செய்வதைக் கண்டு ஊழியர்கள் பதறினார்கள். உடனடியாக ரோப் மூலமாக மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.
The rain is getting chaotic... people are running around with poles and rakes to poke the ceiling of the #Oscars tent — to keep it from pooling with too much water 🌧 https://t.co/txJyEK2jre pic.twitter.com/d2EHbWXgm6
— LAT Entertainment (@latimesent) February 9, 2020
இருந்தாலும், விருது வழங்கும் விழா தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவே மழை விடாது அடித்துக் கொண்டு கொட்டியதால் ரெட் கார்ப்பெட் மீது பிளாஸ்டிக் கவர்களை போர்த்தி ஊழியர்கள் பாதுகாக்கத் துவங்கினார்கள். ஆனாலும் ரெட் கார்ப்பெட் மீது குளம் போல் தண்ணீர் தேங்க துவங்கியது.
Happy #Oscars from the @latimes! A little chilly on the carpet this year, with rain in the forecast, but that’s not stopping anyone from stepping out in their Oscar-Sunday best!
— Christi Carras (@christicarras) February 9, 2020
Check out our #Oscars guide here ahead of the show: https://t.co/4HaPBT5kB0 pic.twitter.com/q8g28aMUjf
பிரம்மாண்டமான சிவப்பு கம்பளம் ஹாலிவுட் பவுல்வர்டு மற்றும் ஹைலேண்ட் அவென்யூவின் கார்னர் பகுதியில் இருந்து விரிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழையால் பங்கேற்பாளர்கள் சிலர் சிவப்பு கம்பளத்தை புறக்கணித்தனர். தொடந்து மழை பெய்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நனைந்த கார்ப்பெட்டை மாற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

அமெரிக்க வானிலை மையம், இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் லேசான மழை பெய்யும் என முன்னதாகவே அறிவித்திருந்தது. இருந்தாலும் இப்படி மழை கொட்டித் தீர்க்கும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால், சேரும், சகதியுமான ரெட் கார்ப்பெட் வரவேற்ப்பை தவிர்த்து விட்டு, விருது வென்றவர்கள் வேறு புறமாக விழா மேடைக்குச் சென்றனர்.
newstm.in

