Theme Check

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி.. காலக்கெடு நிர்ணயித்து நீதிபதிகள் உத்தரவு !

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி.. காலக்கெடு நிர்ணயித்து நீதிபதிகள் உத்தரவு !

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி.. காலக்கெடு நிர்ணயித்து நீதிபதிகள் உத்தரவு !
X

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ள நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் ஆக்சிஜன் தயாரிப்பில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜனை தயாரித்து வழங்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு விசாரணைக்கு முன்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கலாம், வேறு எந்த பணிகளுக்கும் அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டது.

பின்னர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உச்சநீதிமன்றம் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும் ஆக்சிஜனை மத்திய அரசு தான் தேவைக்கு ஏற்ப மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கவேண்டும். தமிழக அரசுக்கு முன்னுரிமை கிடையாது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வருகிற ஜூலை 3ஆம் தேதி வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொள்ளலாம். அதன் பின்னர் உற்பத்தி செய்வது தொடர்பாக அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் கூறினர்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மின்சார வசதி உள்ளிட்டவைகளை தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

newstm.in

Tags:
Next Story
Share it