Theme Check

ஆக்சிஜன் தட்டுப்பாடு.. கொரோனா நோயாளிகள் மேலும் 20 பேர் பலி !!

ஆக்சிஜன் தட்டுப்பாடு.. கொரோனா நோயாளிகள் மேலும் 20 பேர் பலி !!

ஆக்சிஜன் தட்டுப்பாடு.. கொரோனா நோயாளிகள் மேலும் 20 பேர் பலி !!
X

டெல்லியில் ஆக்சிஜன் இல்லாமல் ஒரே நேரத்தில் மேலும் 20 பேர் உயிர் இழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. தற்போது சுமார் 25 லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் நாடுமுழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் கணிசமானவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக சில தினங்களாக வட மாநிலங்களில் நிறைய உயிர் இழப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் வினியோகத்தில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் பிரதான மருரத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அரை மணி நேரத்துக்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் 200 பேரின் உயிர் ஆபத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுளது.
இதனிடையே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனை சேர்க்கையை மூடுவதாகம் நோயாளிகளை வெளியேற்றி வருவதாகவும் டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு மிக அதிக அளவில் உள்ளது. இதனால் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் புதிய நோயாளிகளை சேர்க்க மறுக்கப்படுகிறது. இதனால் பலர் உயிருக்காக போராடும் பரிதாபகரமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய- மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக ஆக்சிஜனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it