பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. ஐகோர்ட் அதிரடி.!
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. ஐகோர்ட் அதிரடி.!

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. மாணவிகளின் செல்போன்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்பட்ட புகாரில், போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கே.கே.நகர் அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த மே மாதம் 24-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின் பல மாணவிகள் அவர் மீது புகார் கூறியதை அடுத்து, ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்ததாக கணக்கில் கொண்டு அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த நிலையில், தன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது செல்லாது என அறிவிக்கக் கோரி ராஜகோபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த சில நாட்களாக விசாரணையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் ராஜகோபாலன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மட்டுமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

