பகீர் கிளப்பும் சிசிடிவி வீடியோ..!! மனைவியுடன் கழிவுநீர் கால்வாயில் விழுந்த காவலர்!!
பகீர் கிளப்பும் சிசிடிவி வீடியோ..!! மனைவியுடன் கழிவுநீர் கால்வாயில் விழுந்த காவலர்!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று அலிகாரில் சுமார் 45 நிமிடங்கள் நீடித்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் அலிகாரில் உள்ள மருத்துவமனைக்கு காவலர் தயானந்த் சிங் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் ராம்காட் சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். அந்தச் சாலை முழுவதும் மேடு பள்ளம் தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்தது.
சாலை தான் அங்கு இருக்கிறது என்று நம்பி காவலர் தயானந்த் சிங் அதில் வாகனத்தை இயக்கியபோது, மழைநீர் மூடிய கழிவுநீர் கால்வாயில் வாகனத்துடன் காவலரும், அவரது மனைவியும் விழுந்தனர்.
Visuals from UP's Aligarh.
— Piyush Rai (@Benarasiyaa) June 18, 2022
Leaving this here. pic.twitter.com/bOhACL96IW
இருவரும் கால்வாயில் விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த சிலர், கால்வாய் அருகே ஓடிவந்து காவலர் மற்றும் அவரது மனைவி இருவரையும் உடனடியாக மீட்டதால் இருவரும் உயிர்தப்பினர். நல்வாய்ப்பாக இருவருக்கும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.
தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

