ஆண்ட்ரியா எடுத்த பகீர் முடிவு ! கோடிகளில் சம்பளமாம்? ரசிகர்கள் ஹப்பி !!
ஆண்ட்ரியா எடுத்த பகீர் முடிவு ! கோடிகளில் சம்பளமாம்? ரசிகர்கள் ஹப்பி !!

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா இப்போது முன்னணி நடிகையாகிவிட்டார். இசை, நடிப்பு, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என தமிழ் திரையுலகில் வட்டமடிக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் அனைத்து படங்களிலும் நடிக்காமல் தனக்கு செட்டாகும் கதைக்கு மட்டும் ஓகே சொல்லி ஆண்ட்ரியா நடிப்பில் முத்திரை பதிக்கிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் - விஜய் சேதுபதி காம்போவில் வெளியான மாஸ்டர் படத்தில் சிறிய ரோலில் இவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில், ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு- 2 படத்தில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏனெனில் பிசாசை தேவதையைப் போல் காட்டி, தந்தையின் பாசத்தையும் உருக்கவிட்டிருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது.

இதனையடுத்து தற்போது பிசாசு-2 வேலைகளில் பிஸியாகிவிட்டார் மிஷ்கின். இதில் ஆண்ட்ரியா ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியாவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இதுவரை லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஆண்ட்ரியா இந்த படம் மூலம் தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பிசாசு- 2 படத்திற்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
newstm.in

