Theme Check

பல்லவன், வைகை திடீர் ரத்து.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!

பல்லவன், வைகை திடீர் ரத்து.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!

பல்லவன், வைகை திடீர் ரத்து.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!
X

தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு 26-ம் தேதி அதிகாலை 5:05 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1:40 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படும் வைகை சூப்பர் பாஸ்ட் ரயில் 26-ம் தேதி எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது மதியம் 2:40 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு புறப்படும்.

அதுபோல், புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் வழியே புது டில்லிக்கு 26-ம் தேதி காலை 9:50க்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், மாற்று வழியில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.

இந்த ரயில் பெரம்பூருக்கு மதியம் 2:20 மணியளவில் வந்து 2:25 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயிலில் சென்னை எழும்பூரிலிருந்து பயணிக்க முன்பதிவு செய்தவர்கள், பெரம்பூரில் இருந்து பயணம் செய்யலாம்.
Next Story
Share it