Theme Check

பெற்றோர்களே தயாரா.. குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி !!

பெற்றோர்களே தயாரா.. குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி !!

பெற்றோர்களே தயாரா.. குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி !!
X

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி செயல்படுத்தப்பட்டது. அதன்படி தற்போது கொரோனா பாதிப்பு பெரியளவில் குறைந்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.

எனினும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு சிறிறு சிறிதாக அதிகரித்து வருகிறது. நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 84 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாலும், இயற்கையான தொற்றின் மூலமாகவும், பெரும்பாலோருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புச்சக்தி அதிகரித்துள்ளது.

corona

18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2ஆவது தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் ஆகி இருந்தால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 5 முதல் 12 வயது வரையிலானவர்களுக்காக பயாலஜிக்கல்- இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கும், 5 முதல் 12 வயது வரையிலானவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தாரின் கோவேக்சின் தடுப்பூசிக்கும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அவசர பயன்பாட்டு அனுமதியை 26-ஆம் தேதி வழங்கியது.

corona

இதையடுத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை எப்போது தொடங்கலாம் என்பது பற்றி விவாதித்து முடிவு எடுத்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார்கள். அந்த பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it