Theme Check

பெற்றோர்களே உஷார்..!! ஆன்லைனில் கேம் விளையாடிய பள்ளி மாணவிக்கு நேர்ந்த அவலம்..!!

பெற்றோர்களே உஷார்..!! ஆன்லைனில் கேம் விளையாடிய பள்ளி மாணவிக்கு நேர்ந்த அவலம்..!!

பெற்றோர்களே உஷார்..!! ஆன்லைனில் கேம் விளையாடிய பள்ளி மாணவிக்கு நேர்ந்த அவலம்..!!
X

சென்னையில் வசித்து வருபவர் நிலா. இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மகள் இருக்கிறார். தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவிக்கு இணையதளத்தில் லூடோ விளையாடும் பழக்கம் உள்ளது. இதன் மூலம் திருவொற்றியூரைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான ஜோக்கர் என்கிற விக்னேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

இவர்களின் நட்பு நாளடைவில் சமூக வலைதளங்களில் செழித்து வளர்ந்தது. இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவியிடம் விக்னேஷ் ஆபாசமாக பேசத் தொடங்கி உள்ளார். மேலும் வீடியோ கால் செய்து மாணவியை ஆபாசமாக பதிவு செய்து மிரட்டலில் ஈடுபட்டுள்ளான்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சம்பவத்தன்று மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத அறிந்த விக்னேஷ் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். தான் செய்து வைத்திருந்த வீடியோவைக் காட்டி சமூக வலைதளங்களில் பரவச் செய்துவிடுவேன் என்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

rape

இதனால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானதால் அவரின் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் மாணவி சொல்லி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், விக்னேஷை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஒரு வீடியோவிற்கு ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 லட்சம் வரை பணம் தந்தால் வீடியோவை தருகிறேன் என்று பேரம் பேசி இருக்கிறான். இதனால் மிரண்டு போன பெற்றோர், சமாளித்துக் கொண்டனர். பின்னர் விக்னேஷின் ஜிபே எண்ணை அனப்பி அதன் வழியாக பணம் அனுப்ப வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் ஆடிப் போன மாணவியின் தாய் ஆவடி மாநகர துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் குற்றவாளி விக்னேஷ் பதுங்கி இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் கொள்ளமேடு பகுதிக்கு சென்ற போலீசார் விக்னேஷை அதிரடியாக கைது செய்தனர்.

Man-gets-106-years-jail-term-for-raping-impregnating-minor-daughter

ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு செயலின் மூலம் ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் சிறை சென்ற விக்னேஷ் அதன் பிறகு செங்கல்பட்டில் வாடகை வீட்டில் தங்கி பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட விக்னேஷை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவனை சிறையில் அடைத்தனர். சமூக வலைதளங்களில் தங்கள் குழந்தைகள் விழுந்துவிடாத படி பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடுவது வேதனை அளிக்கிறது.

Next Story
Share it