பெற்றோர்களே உஷார் ! கருப்பு பூஞ்சை தொற்று குழந்தைகளுக்கு எளிதாக பரவுமா ?
பெற்றோர்களே உஷார் ! கருப்பு பூஞ்சை தொற்று குழந்தைகளுக்கு எளிதாக பரவுமா ?

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் மிரட்டத் தொடங்கியுள்ளது. மேலும் மூன்றாவது அலை எச்சரிக்கையும் உள்ளது. சரி கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள மக்கள் போராடினால் மற்றொரு பக்கம் மிரட்டுகிறது பூஞ்சை நோய்கள்.
மும்பையின் வடகிழக்கு புறநகர் பகுதியான முலுண்ட் பகுதியில் அமைந்திருக்கும் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் குழந்தை மருத்துவரான டாக்டர் ஜெசல் ஷெத் கூறுகையில், கருப்பு பூஞ்சை தொற்று என்பது கடுமையான கொரோனா நோயாளிகளில் சமீபத்தில் காணப்பட்ட ஒரு அரிய வகையான பூஞ்சை தொற்று. இந்த தொற்றானது பெரும்பாலும் ரத்த நாளங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹைஃபாக்களால் வகைப்படுத்தப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு உயிருக்கு ஆபத்தானது இந்த கரும்பூஞ்சை தொற்று என்று குறிப்பிட்டுள்ளார். பெரியவர்களுடன் ஒப்பிடும் போது குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் தான் குழந்தைகளுக்கு எந்தவொரு நோய் தொற்றுக்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிடுகிறார். அதோடு அவர் சில அறிகுறிகளையும் கூறியுள்ளார்.
புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் :
தலைவலி மற்றும் நெற்றியில் வீக்கம், முகத்தின் ஒரு பக்கத்தில் வீக்கம், மூக்கை சுற்றி கருப்பாக ஓடு போன்று உருவாவது, மங்கலான பார்வை அல்லது பார்வையிழப்பு, மார்பு வலி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாச சிக்கல்கள் உள்ளிட்ட அறிகுறிகள் குழந்தைகளிடம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இது மாதிரியான தொற்றுகளில் இருந்தது பாதுகாப்பாக இருக்க கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதற்கு முன், அடிக்கடி கைகளை கழுவும் மற்றும் சுத்தப்படுத்தும் பழக்கத்தை குழந்தைகளிடையே பெற்றோர்கள் ஊக்குவிக்க மருத்துவர் வலியுறுத்தி உள்ளார். தவிர வீட்டிற்குள் விசிட்டர்கள் வராமல் இருக்குமாறு பார்த்து கொள்வதும் அவசியம். மேலும் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், வெளியே விளையாட செல்லாதவாறு பார்த்து கொள்வதும் முக்கியம்.
இல்லையெனில் குழந்தை விளையாடச்செல்லும் போது மாக்ஸ் அணிந்திருப்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். ஒருவேளை குழந்தைக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டால் அதற்கான சிகிச்சையில் மருத்துவ நிலையின் அடிப்படையில் அறுவை சிகிச்சையுடன் ஆன்ட்டி ஃபங்கல் மருந்துகளும் (antifungal medicines) அடங்கும் என்று டாக்டர் ஷெத் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in