Theme Check

பெற்றோர்கள் அதிர்ச்சி..!! அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

பெற்றோர்கள் அதிர்ச்சி..!! அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

பெற்றோர்கள் அதிர்ச்சி..!! அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!
X

தமிழ்நாட்டில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,912 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாக கடைகளில் ஏசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Rapid-test-icmr

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில், 30 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா உறுதியான 30 மாணவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று மாணவர்களிடையே பரவுவது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it