Theme Check

நீ இல்லாத இந்த உலகத்தில் வாழ விரும்பவில்லை - கடலில் விழுந்து உயிரை மாய்த்து கொண்ட பெற்றோர்கள்..!!

நீ இல்லாத இந்த உலகத்தில் வாழ விரும்பவில்லை - கடலில் விழுந்து உயிரை மாய்த்து கொண்ட பெற்றோர்கள்..!!

நீ இல்லாத இந்த உலகத்தில் வாழ விரும்பவில்லை - கடலில் விழுந்து உயிரை மாய்த்து கொண்ட பெற்றோர்கள்..!!
X

ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை ஊழியரான கோவை மாவட்டம் சமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (62).

இவருக்கு தனலட்சுமி (59) என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் கனீஷ் பிரபாகர், கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்ததால் இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி வீட்டில் இருந்து கோவிந்தராஜும், தனலட்சுமியும் திடீரென்று மாயமாகினர். இதையடுத்து, அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் சென்ற தம்பதியினர் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் இருவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

dead-body

அதிகாலை இருவரது உடல்களும் கரை ஒதுங்கிய நிலையில், கடலோர காவல் குழும போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கோவிந்தராஜின் சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டையை கொண்டு விசாரித்தபோது அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் - தனலெட்சுமி என்பது தெரியவந்தது.

இதனிடையே அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு உறவினர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், தாங்கள் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், தங்களது சொத்துக்களை விற்று மகன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி மக்களுக்கு உதவி செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it