Theme Check

இனி சாலைகளில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம்..!!

இனி சாலைகளில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம்..!!

இனி சாலைகளில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம்..!!
X

புதுச்சேரி நகரப்பகுதியில் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது.

புதுவை நகராட்சி தனது வருவாயை பெருக்க பல்வேறு வரி வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வீட்டுவரி, காலிமனை வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வணிக உரிமம் ஆகியவற்றுக்கான கட்டணத்தை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

கூடுதலாக வருவாயை பெருக்க புதிதாக வரி விதிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. அதே போல் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இந்த பணியை தனியாரிடம் விட டெண்டரும் விடப்பட்டுள்ளது.

bike

இதற்கான ஏலம் இணையதளம் மூலம் வருகிற 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதவிர பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளுக்கான தொகை வசூல், அடிக்காசு வசூல் உள்ளிட்டவை தொடர்பான பணிகளுக்கும் ஏலம் நடக்கிறது.

இதுதொடர்பான அறிவிப்பினை புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். இதன்படி மோட்டார் சைக்கிளுக்கு ரூ.10-ம், கார்களுக்கு ரூ.30-ம், கனரக வாகனங்களுக்கு ரூ.40-ம் நாளொன்றுக்கு வசூலிக்கப்பட உள்ளது. இந்த கட்டணத்தை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

newstm.in

Next Story
Share it