Theme Check

இனி ரயிலில் பாட்டு கேட்டால் அபராதம்! அதிரடி அறிவிப்பு!!

இனி ரயிலில் பாட்டு கேட்டால் அபராதம்! அதிரடி அறிவிப்பு!!

இனி ரயிலில் பாட்டு கேட்டால் அபராதம்! அதிரடி அறிவிப்பு!!
X

ரயிலில் பயணம் செய்யும் போது சத்தமாக பாட்டு கேட்டால் அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ரயில்வே பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவர உள்ளது. அதன்படி, ரயிலில் பயணம் செய்யும்போது சத்தமாகப் பேசினாலோ அல்லது சத்தமாக இசையை வாசித்தாலோ பிடிபடும் பயணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இரவில் பத்து மணிக்கு மேல் மின்விளக்குகளை எரியவிடவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன. பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டால், ரயில் ஊழியர்களே பொறுப்பாவார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததால், இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

train

அதே போல், ரயில்வே போலீஸார், டிக்கெட் பரிசோதகர், கோச் உதவியாளர்கள், கேட்டரிங் ஊழியர்கள் தங்கள் பணிகளை முறையாக செய்வதை கண்காணிக்கவும் ரயில்வே நிர்வாகம் பொறுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it