Theme Check

இறந்த பிறகும் பென்ஷன்.. நிதியமைச்சர் பிடிஆர் தகவல்..!

இறந்த பிறகும் பென்ஷன்.. நிதியமைச்சர் பிடிஆர் தகவல்..!

இறந்த பிறகும் பென்ஷன்.. நிதியமைச்சர் பிடிஆர் தகவல்..!
X

தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழு கூட்டம் கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று உரையாற்றினார்.

அந்த உரையை தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “நிதித் துறை மூலம் தமிழக அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே நல்ல கூட்டாண்மையை உருவாக்க வேண்டும்.

எங்கள் முன்னெடுப்புகள் வங்கி செயல்பாடுகளை மேலும் அதிகரிக்கும் எனவும், வங்கி வைப்பு நிதியை உயர்த்தும் எனவும் நம்புகிறேன்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த இருக்கிறோம். எனவே, வங்கி செயல்பாடுகள் அதிகரிக்கும்.

அரசு நலத் திட்டங்களின் பலன்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்று சேர்வதில்லை. எனவே, நிர்வாகத்தை மேம்படுத்த புதிய வழிகளை கண்டறிய வேண்டும். நகைக் கடன் திட்டத்தில் ஆயிரக்கணக்கான முறைகேடுகள் நடந்துள்ளன.

தகுதியான பயனாளிகளாக இருந்தும் பல தவறுகளால் ஏழை மக்களுக்கு பலன் கிடைக்காமல் இருப்பது மிகப்பெரிய தோல்வி. குடிமை பதிவேட்டில் இறந்து விட்டதாக பதிவாகியுள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு இன்னும் பென்ஷன் செலுத்தப்படுகிறது.

ரேஷன் கடைகளில் பொருட்களே வாங்காமல் இருந்த பல லட்சக்கணக்கானோர், 4000 ரூபாய் கொடுத்தபோது வந்து வாங்கியுள்ளனர்.

இதெல்லாம் மிகப்பெரிய பாவமாக கருதுகிறேன். தரவுகளே இனி நமது அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கப் போகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Next Story
Share it