Theme Check

மக்களே தயாரா..!! இன்று முதல் சென்னையில் மலர் கண்காட்சி...!! நுழைவு கட்டண விவரம் வெளியீடு..!!

மக்களே தயாரா..!! இன்று முதல் சென்னையில் மலர் கண்காட்சி...!! நுழைவு கட்டண விவரம் வெளியீடு..!!

மக்களே தயாரா..!! இன்று முதல் சென்னையில் மலர் கண்காட்சி...!! நுழைவு கட்டண விவரம் வெளியீடு..!!
X

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி இன்று 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் கருணாநிதி பிறந்தநாளில் சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1

கலைவாணர் அரங்கில் இன்று ஜூன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் அழகிய மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், இந்த மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) துவக்கி வைக்கிறார். இந்த நிலையில், இன்று நடைபெறும் மலர் கண்காட்சியை கட்டணம் செலுத்தி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்களுக்கு ரூ.20-ம் பெரியவர்களுக்கு ரூ.50 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it