Theme Check

மக்கள் அதிர்ச்சி !! இன்று ஒரு நாளில் சவரனுக்கு 752 ரூபாய் உயர்வு...

சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.752 உயர்ந்து வரலாற்றில் முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.33,328க்கு விற்பனையாகிறது.

மக்கள் அதிர்ச்சி !! இன்று ஒரு நாளில் சவரனுக்கு 752 ரூபாய் உயர்வு...
X

சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.752 உயர்ந்து வரலாற்றில் முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.33,328க்கு விற்பனையாகிறது.

2020 ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது.இதனால் சென்னையில் ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வரலாறு காணாத அளவுக்கு பவுன் விலை ரூ.31 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.28 உயர்ந்து 4100 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32,800 க்கு விற்பனை ஆனது.

மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.66 உயர்ந்து 4166 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.33,328 க்கு விற்பனை ஆனது.

ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.752 உயர்ந்தது மக்களை பெரிதும் பாதித்துள்ளது. திருமணம் போன்ற விசேசங்களுக்கு தங்கம் பரிசளிப்பது இயல்பான ஒன்று. ஆனால் விலை உயர்வால், இனி தங்கம் வாங்குவது சாமானிய மக்களுக்கு கனவாவே போயிடும் போல இருக்கு.

newstm.in

Tags:
Next Story
Share it